ஆர்மீனியா-அஜர்பைஜன் இடையேயான ஆக்கிரமிப்பு தொடர்பான மோதல் : 2,783 வீரர்கள் வீரமரணம் என அஜர்பைஜன் அறிவிப்பு

0 2409
ஆர்மீனியா-அஜர்பைஜன் இடையேயான ஆக்கிரமிப்பு தொடர்பான மோதல் : 2,783 வீரர்கள் வீரமரணம் என அஜர்பைஜன் அறிவிப்பு

ஆர்மீனியா உடனான நாகோர்னோ-கராபாக் பகுதி ஆக்கிரமிப்பு தொடர்பான மோதலில், 2,783 வீரர்கள் உயிர்த்தியாகம் செய்ததாக அஜர்பைஜான் அறிவித்துள்ளது.

இதுதொடர்பான அறிவிப்பில், 103 பேரின் உடல்கள் அடையாளம் காண முடியவில்லை எனவும், 100-க்கும் மேற்பட்ட வீரகள் காணவில்லை எனவும் குறிப்பிடப்பட்டு உள்ளது.

மேலும், தேசத்திற்கான போரில் ஆர்மீனியாவிற்கு எதிராக, தங்களது வீரர்கள் தைரியத்தையும், வீரத்தையும் வெளிக்காட்டியதாக அஜர்பைஜன் குறிப்பிட்டுள்ளது.

முன்னதாக, இந்த மோதலில் 2,137 ஆர்மீனிய வீரர்கள் உயிரிழந்ததாக அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments