இலங்கையில் புரெவி புயல் கரை கடந்த நிலையில் உயிர்ச்சேதம்,பொருட்சேதம் தவிர்ப்பு- இலங்கை வானிலை ஆய்வு மையம்

0 1591
இலங்கையில் புரெவி புயல் கரை கடந்த நிலையில் உயிர்ச்சேதம்,பொருட்சேதம் தவிர்ப்பு- இலங்கை வானிலை ஆய்வு மையம்

இலங்கையில் புரெவி புயல் நேற்று முன்தினம் இரவு கரை கடந்த நிலையில், உயிர்ச்சேதம் மற்றும் பொருட்சேதம் தவிர்க்கப்பட்டதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

புயல் கரையை கடந்தாலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு அதன் பாதிப்பு இருக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திரிகோணமலை மாவட்டத்தில் Thiriyaya மற்றும் Kuchchaveli ஆகிய கிராமங்கள் இடையே புரெவி புயல் கரையை கடந்ததாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே நாளில் 200 மில்லி மீட்டர் அளவுக்கு மழை பெய்த து என்றும் பலத்த காற்று வீசியதால் சாலைகளில் மரங்கள் முறிந்து விழுந்தன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திரிகோணமலையில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக ஏராளமான வீடுகள் சேதம் அடைந்துள்ளன. நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். தொடர் மழை காரணமாக வடக்கு வவுனியா, முல்லைத்தீவு உள்ளிட்ட பகுதிகளில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments