பிரம்மபுத்ரா நதியின் மீது அணை கட்டும் சீனா - இந்தியா தீவிர கண்காணிப்பு
பிரம்மபுத்ரா நதியின் மீது சீனா அணை கட்டுவதை இந்தியா கவனமாக கண்காணித்து வருவதாக வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது .
நதியின் கீழ்ப்பரப்பில் ஹைட்ரோ பவர் மின்திட்டங்களை மேற்கொள்ள தனக்கு அதிகாரம் இருப்பதாக சீனா தெரிவித்துள்ள நிலையில், திபெத் பகுதியில் அணைகட்ட சீனாவின் பொதுத்துறை நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய வெளியுறவுச் செய்தித் தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவாத்சவா, நதியின் நீரோட்டத்தை திசை திருப்ப மாட்டோம் என்று சீனா வாக்குறுதி அளித்துள்ளதாகவும் இந்தியாவின் நலன்கள் உரிய முறையில் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
Comments