வேளாண் சட்டங்களை வாபஸ் பெறாவிட்டால் நாடு தழுவிய போராட்டம்- மத்திய அரசுக்கு மம்தா பானர்ஜி எச்சரிக்கை
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் நாடு முழுவதும் போராட்டம் நடத்தப்படும் என மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார்.
விவசாயிகளின் வாழ்க்கை மற்றும் வாழ்வாதாரம் குறித்து தாம் மிகவும் அக்கறை கொண்டுள்ளதாகவும், விவசாயிகள் எதிர்ப்பு மசோதாக்களை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் என்றும் ட்விட்டரில் அவர் பதிவிட்டுள்ளார்.
தொடக்கம் முதலே இந்த விவசாய எதிர்ப்பு மசோதாக்களை கடுமையாக எதிர்த்து வருவதாகவும் மம்தா குறிப்பிட்டுள்ளார்.
I am very much concerned about the farmers, their lives and livelihood. GOI must withdraw the anti-farmer bills. If they do not do so immediately we will agitate throughout the state and the country. From the very start, we have been strongly opposing these anti-farmer bills.
— Mamata Banerjee (@MamataOfficial) December 3, 2020
Comments