ஐபிஎல் தொடரில் புதியதாக இரண்டு அணிகள்? டிச.24ந் தேதி பிசிசிஐ ஆண்டு பொதுக்குழு கூட்டம்

0 5117
ஐபிஎல் தொடரில் புதியதாக இரண்டு அணிகள்? டிச.24ந் தேதி பிசிசிஐ ஆண்டு பொதுக்குழு கூட்டம்

இந்திய கிரிக்கெட் வாரியத்தின் ஆண்டு பொதுக்குழு கூட்டம், வரும் 24ம் தேதி நடைபெற உள்ளது.

கூட்டத்தில் ஐபிஎல் தொடரில் இரு புதிய அணிகளைச் சேர்ப்பது குறித்து ஒப்புதல் பெறப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆசிய கிரிக்கெட் கவுன்சிலுக்கான பிரதிநிதியாக பிசிசிஐ செயலாளரும், அமித் ஷா மகனுமான ஜெய் ஷா தேர்வு செய்யப்படலாம் எனக் கூறப்படுகிறது.

மேலும், அடுத்த ஆண்டில் இந்தியாவில் நடக்க உள்ள டீ20 உலகக் கோப்பை தொடர் மற்றும் 2028-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட்டைச் சேர்ப்பது உள்ளிட்ட அம்சங்கள் குறித்தும் விவாதிக்க வாய்ப்புள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments