டிச. 5 - ஜெயலலிதாவின் மறைந்த நாளன்று அகல் விளக்கு ஏற்ற தொண்டர்களுக்கு அழைப்பு - அதிமுக தலைமை அறிவிப்பு
தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சியை நிறுவிட சூளுரைத்து, ஜெயலலிதா மறைந்த நாளன்று, அகல் விளக்கு ஏற்றுமாறு, தொண்டர்களுக்கு
அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர் செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இருவரும் அழைப்பு விடுத்துள்ளனர்.
மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 4 -ஆம் ஆண்டு நினைவு தினம், , வருகிற 5ஆம் தேதி கடைபிடிக்கப்படுவதையொட்டி, இரு தலைவர்களும் அதிமுக தொண்டர்களுக்கு கூட்டாக கடிதம் எழுதி உள்ளனர்.
தமிழகம் முழுவதும் 5 ஆம் தேதி மாலை 6 மணிக்கு ஜெயலலிதாவின் உருவப்படம் முன், அகல் விளக்கு ஏற்றி, அஞ்சலி செலுத்துமாறு, அதிமுக தொண்டர்களை இரு தலைவர்களும் கேட்டுக் கொண்டுள்ளனர்.
Comments