ஜோர்டானில் துவங்கியது குங்குமப்பூ விவசாயம் : 1 கிராம் குங்குமப்பூ ரூ.1,030 க்கு விற்பனை
மத்திய கிழக்கு நாடான ஜோர்டானில், முதன் முறையாக ஒருவர் குங்குமப்பூ விவசாயத்தில் ஈடுபட்டுள்ளார். ஜெராஷ் நகரை சேர்ந்த Adel Suboh, இத்தாலியில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட குங்குமப்பூவால், 32,000 சதுரடியில் குங்குமப்பூ பண்ணையை உருவாக்கி உள்ளார்.
1 கிராம் குங்குமப்பூ தயாரிக்க 500 களங்கங்கள் தேவைப்படுவதாக தெரிவிக்கும் அவர், 1 மலரில் 3 களங்கங்கள் மட்டுமே உள்ளதால், ஆயிரக்கணக்கான மலர்களில் இருந்து களங்கங்களை சேகரிக்க அதிக நேரமும், உழைப்பும் தேவைப் படுவதாக தெரிவிக்கிறார்.
1 கிராம் குங்குமப்பூவை, அவர் 1,030 ரூபாய்க்கு விற்று வரும் நிலையில், குங்குமப்பூ சேர்க்கப்படும் கேக்குகளுக்கு ஜோர்டானில் வரவேற்பு அதிகரித்துள்ளது.
Comments