டிசம்பர் 4 ஆம் தேதி கடற்படை நாள். இந்தியா பாகிஸ்தானை கதிகலங்கடித்த நாள்.

0 4451
டிசம்பர் 4 - இந்திய கடற்படை நாள்

டிசம்பர் 4 ஆம் தேதி நம் நாட்டின் கடற்படை நாளாக கொண்டாடப்படுகிறது.ஏன் தெரியுமா?


1971 ஆம் வருடம் வங்காளதேச விடுதலைக்காக இந்தியா பாகிஸ்தானுடன் போரிட்டு 13 நாட்களில் போரை வெற்றிகரமாக முடித்தது. அந்த போர் காலகட்டத்தில் 1971 டிசம்பர் 4 ஆம் தேதிதான் இந்திய கப்பற்படை பாகிஸ்தான் கராச்சி துறைமுகத்தின் மீது ஆப்ரேஷன் டிரைடன்ட்(Operation Trident) என்கிற திரிசூலம் படை நடவடிக்கை நடத்தி பாகிஸ்தானின் ஏவுகணை கப்பல் உட்பட 4 கப்பல் கலங்களை மூழ்கடித்தது. முக்கியமாக இந்திய கப்பல் படையில் ஒரு உயிர் சேதம் கூட இல்லை.

இந்த ஆப்ரேஷன் டிரைடண்ட்டுக்கு 3 நாட்கள் கழித்துத்தான் ஆப்ரேஷன் பைத்தான் (Operation Python) எனப்படும் மலைப்பாம்பு படை நடவடிக்கை எடுக்கப்பட்டு பாகிஸ்தானின் எண்ணெய் கிடங்குகள் மற்றும் ஆயுத கிடங்குகள் அழிக்கப்பட்டன.  இந்தியாவிற்கு ஒரு பிரமாண்ட வெற்றியும் கிடைத்தது.

இந்த வெற்றிகளின் நினைவாகதான்,  ஆண்டு தோறும் இந்த டிசம்பர் 4 ஆம் தேதி நேவி டே (Navy Day)எனப்படும் கடற்படை நாள் இந்திய கப்பற்படையால் கொண்டாடப்படுகிறது.

இந்த கடற் படை நாளுக்கு முந்திய 7 நாட்கள் கடற்படை வாரம் (Navy Week) கொண்டாடப்படும். 7 ஆம் நாளாகிய டிசம்பர் 4 ஆம் தேதி கடற்படை நாள் கொண்டாடப்படும். இந்த கடற்படை வாரத்தில் கடலில் நீச்சல் போட்டி , கப்பற்படை இசைக்குழுவினரின் இசை முழக்கங்கள் மாணவர்களுக்கு கப்பல்களை பார்க்கும் ஏற்பாடு,கப்பல்களின் அணி வகுப்பு என ஏகப்பட்ட தடபுடல் நிகழ்வுகள் நடத்தப்படும்.

கடற்படை நாளில், கடற்படை ராணி போட்டி, கடற்படை விருந்து என்று அமர்க்களப்படும். அனைத்து கப்பல் படை அதிகாரிகளுமே நம் இந்திய கடற்படையின் வெற்றிகளையும், இந்திய கப்பல் படையின் பெருமைகளையும் சிறப்பாக கொண்டாடுவார்கள்.  

இந்த டிசம்பர் மாதம் பல முக்கிய நிகழ்வுகள் நமக்கு நினைவுக்கு வந்தாலும்,  இந்த கடற்படை நாளை மறக்காமல் இந்திய கப்பற்படையின் வெற்றிகளை எண்ணி நாமும் பெருமிதம் கொள்வோம்.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments