பிரேத பரிசோதனைகளை தொடக்கம் முதல் முடிவு வரை வீடியோ பதிவு செய்ய உத்தரவு

0 2623
உத்தரப்பிரதேச மாநிலம் ஹத்ராஸில் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளான பெண்ணின் உடல் அவசரமாக எரியூட்டப்பட்டது சர்ச்சையானது என்பதால், பிரேத பரிசோதனைகளை தொடக்கம் முதல் முடிவு வரை வீடியோ பதிவு செய்ய வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரை பேரையூரைச் சேர்ந்த ரமேஷ் என்பவரை போலீஸார் விசாரணைக்கு அழைத்துச் சென்று அடித்துக் கொலை செய்து விட்டதாக கூறி தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றி உத்தரவிட்டார்.

அந்த உத்தரவில், இறந்தவரின் உடலை உறவினர்கள் யாரும் பார்வையிடுவதற்கு முன்பு பிரேத பரிசோதனையை தொடங்கக்கூடாது, உடலில் எலும்பு முறிவு இருப்பதை கண்டறிய முழு உடலும் எக்ஸ்ரே செய்யப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட உத்தரவை நீதிபதி பிறப்பித்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments