மணிக்கு 50 கிலோ மீட்டர் முதல், 65 கிலோ மீட்டர் வரையில் பலத்த காற்று வீசக்கூடும்: வானிலை மையம்
மன்னார் வளைகுடா பகுதியில் நிலை கொண்டிருந்த புரெவி புயல் பாம்பன் அருகில் மாலை 5.30 மணி அளவில் வலு குறைந்து ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறியதாக இந்திய வானிலை ஆய்வு மையத்தின் தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்தார்.
சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய பாலச்சந்திரன், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தென்மேற்கு திசையில் நகர்ந்து இராமநாதபுரத்திற்கும் தூத்துக்குடிக்கும் இடைப்பட்ட பகுதியில் இன்று இரவு அல்லது நாளை அதிகாலையில் கரையை கடக்கும் என்றார்.
Comments