உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை 70 சதவீதத்தில் இருந்து 80 சதவீதமாக அதிகரிப்பு-அமைச்சர் ஹர்திப்சிங் புரி
உள்நாட்டு விமானப் போக்குவரத்து சேவை 70 சதவிதத்தில் இருந்து 80 சதவீதமாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அந்த துறை அமைச்சர் ஹர்திப்சிங் புரி டிவிட்டரில் வெளியிட்ட பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
கொரோனா பாதிப்பு காரணமாக 2 மாதங்கள் நிறுத்தி வைக்கப்பட்ட விமான சேவை மே 25 ஆம் தேதி மீண்டும் தொடங்கியது. தொடர்ந்து படிப்படியாக விமானங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு, கொரோனா பரவலுக்கு முன்பு இருந்த வழக்கமான நிலையில் 80 சதவீதத்தை தற்போது எட்டியுள்ளது.
டிசம்பர் 2 ஆம் தேதி நிலவரப்படி 2040 விமானங்களில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 364 பேர் பயணித்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்திப்சிங் புரி தெரிவித்துள்ளார்.
Comments