தூத்துக்குடி மாவட்டத்தில் மாலை 6 மணிக்கு மேல் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம்-ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவு

0 6444
தூத்துக்குடி மாவட்டத்தில் மாலை 6 மணிக்கு மேல் பொதுமக்கள் யாரும் வெளியே வர வேண்டாம்

புரெவி புயல் எதிரொலியாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று மாலை 6 மணி முதல் பொதுமக்கள் யாரும் அத்தியாசிய தேவையின்றி வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்த செய்திக்குறிப்பில், புரெவி புயல் கரையைக் கடக்கும் போது பலத்த காற்றுடன் கூடிய மிக கனமழை பெய்யக்கூடுமென எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் நீர்நிலைகள் மற்றும் கடற்கரைக்கு அருகே செல்ல வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

மின்கம்பங்கள் மின்கம்பிகள், தெருவிளக்குகள், மின் மாற்றிகள் ஆகியவற்றுக்கு அருகில் செல்லவோ, தொடவோ வேண்டாம் எனவும், பொதுமக்கள் எக்காரணம் கொண்டும் மரங்களுக்கு கீழ் ஒதுங்க வேண்டாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவசரகால கட்டுபாட்டு அறைக்கு 1077 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments