ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் தமிழகத்தில் மட்டும் ஏன் குறைக்கப்படவில்லை:கமல்ஹாசன் கேள்வி
ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் தமிழகத்தில் மட்டும் ஏன் குறைக்கப்படவில்லை என மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேள்வி எழுப்பியுள்ளார்.
ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் டெல்லியில் 800 ரூபாய், மஹாராஷ்டிராவில் 980 ரூபாய், ராஜஸ்தானில் 1200 ரூபாய், மேகாலயாவில் 1000 ரூபாய் என ட்விட்டரில் குறிப்பிட்டுள்ள கமல்ஹாசன், ஆனால், தமிழகத்திலோ 3000 ரூபாய் வசூலிக்கப்படுவதாகக் கூறியுள்ளார்.
பல மாநிலங்கள் கட்டணத்தைக் குறைத்த பின்னரும் தமிழகம் மட்டும் ஜூன் மாதம் நிர்ணயித்த கட்டணத்தையே தொடர்வதன் மர்மம் என்ன? என்றும் கமல்ஹாசன் வினவியுள்ளார்.
ஆர்டி-பிசிஆர் கொரோனா பரிசோதனைக்கான கட்டணம் டெல்லியில் ரூ.800, மஹாராஷ்டிராவில் ரூ.980, ராஜஸ்தானில் ரூ.1200, மேகாலயாவில் ரூ.1000. ஆனால், தமிழகத்திலோ ரூ.3000/-
— Kamal Haasan (@ikamalhaasan) December 3, 2020
பல மாநிலங்கள் கட்டணத்தைக் குறைத்த பின்னரும் தமிழகம் மட்டும் ஜூன் மாதம் நிர்ணயித்த கட்டணத்தையே தொடர்வதன் மர்மம் என்ன?
Comments