' சாரி... நாங்க சாப்பாடு கொண்டு வந்துட்டோம்!'- அரசு கொடுத்த உணவை ஏற்க மறுத்த விவசாயிகள்

0 4559

டெல்லியில் விவசாயிகளுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையின் போது, மத்திய அரசு சார்பில் கொடுக்கப்பட்ட  உணவை விவசாயிகள் ஏற்க மறுத்து விட்டனர்.

மத்திய அரசால் கொண்டுவரப்பட்ட புதிய விவசாயச் சீர்திருத்தச் சட்டங்களை எதிர்த்து பஞ்சாப் மாநில விவசாய அமைப்பினர் வரலாறு காணாத வகையில் ஒன்று திரண்டு டெல்லி வரை பேரணியாகச் சென்று போராட்டம் நடத்திவருகின்றனர். போராட்டத்தில் 50,000 விவசாயிகள் பங்கு கொண்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கடந்த 8 நாள்களாக தலைநகர் டெல்லியில் விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். உணவு உள்ளிட்டவற்றை சாலையிலேயே சமைத்தும், கிடைத்த இடத்தில் உறங்கியும் போராட்டத்தை விவசாயிகள் முன்னெடுத்துள்ளனர்.

இந்த நிலையில், வேளாண்துறை அமைச்சகம் சார்பில் விவசாயிகளிடத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. இதற்காக, டெல்லி விஞ்ஞான பவனில் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அப்போது, விவசாயிகளுக்கு அரசு தரப்பில் கொடுத்த டீயை கூட குடிக்க விவசாயிகள் சங்க நிர்வாகிகள்  மறுத்து விட்டனர். அரசு கொடுத்த மதிய உணவையும் ஏற்க மறுத்து விட்டனர். 'எங்களுக்கான உணவை நாங்களே கொண்டு வந்துள்ளோம்' என்று தாங்கள் கொண்டு வந்த உணவுகளை பங்கிட்டு சாப்பிட்டனர். சிலர் விஞ்ஞான பவனில் தரையில் அமர்ந்து உணவு சாப்பிட்டனர்.

இதற்கிடையே, பஞ்சாப் மாநில முன்னாள் முதல்வர் பிரகாஷ் சிங் பாதல், மத்திய அரசு விவசாயிகளுக்கு துரோகமிழைக்கிறது. அதனால்,எனக்கு வழங்கப்பட்ட பத்ம விபூசன் விருதை திருப்பி அளிக்கப் போவதாக கூறியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments