பழனி முருகன் கோவிலில் உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு நடந்த புகார்-நீண்ட நாட்களுக்கு பிறகு சூடுபிடிக்கத் தொடங்கிய விசாரணை

0 1220
பழனி முருகன் கோயிலில் உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு நடந்த புகாரில் கோயில் அதிகாரிகளிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பழனி முருகன் கோயிலில் உற்சவர் சிலை செய்ததில் முறைகேடு நடந்த புகாரில் கோயில் அதிகாரிகளிடம் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த 2004-ல் 220 கிலோ எடை கொண்ட ஐம்பொன் சிலையை செய்ததில் மோசடி நடந்தது 14 ஆண்டுகளுக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டது. இதனையடுத்து, சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் விசாரணை நடத்தி, தங்கம் கையாடல் செய்யப்பட்டதாக, சிலை செய்யும் நிபுணரான தலைமை ஸ்தபதி முத்தையா, கோயில் இணைஆணையர் ராஜா ஆகியோரை கைது செய்தனர்.

இந்நிலையில் நீண்ட ஆண்டுகளுக்கு பிறகு சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு ஏடிஎஸ்பி மாதவன் தலைமையிலான போலீசார் பழனியில் முகாமிட்டு, கோயிலில் பணிபுரியும் அதிகாரிகளிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments