புதிய டிஜிட்டல் வங்கி நடவடிக்கைகள், புதிய கிரெடிட் கார்டுகள் வழங்குதல் ஆகியவற்றை நிறுத்தி வைக்க HDFC வங்கிக்கு ரிசர்வ் வங்கி உத்தரவு
புதிய டிஜிட்டல் வங்கி நடவடிக்கைகள், புதிய கிரெடிட் கார்டுகள் வழங்குதல் ஆகியவற்றை நிறுத்தி வைக்குமாறு தங்களுக்கு ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளதாக HDFC வங்கி தெரிவித்துள்ளது.
வங்கியின் டிஜிட்டல் சர்வர்களில் கடந்த 2 ஆண்டுகளாக தொடர்ந்து கோளாறு ஏற்பட்டு அதன் காரணமாக வாடிக்கையாளர்கள் பாதிப்புக்கு ஆளானதால், இந்த உத்தரவை ரிசர்வ் வங்கி பிறப்பித்துள்ளது.
கோளாறுகள் சரி செய்யப்பட்டு, ரிசர்வ் வங்கியின் சம்மதம் பெற்று, தற்காலிகமாக முடக்கப்பட்டுள்ள வங்கி நடவடிக்கைகள் மீண்டும் துவக்கப்படும் என HDFC வங்கி தெரிவித்துள்ளது.
அதே நேரம் ரிசர்வ் வங்கியின் உத்தரவால் புழக்கத்தில் உள்ள கிரெடிட் கார்டுகள் மற்றும் இதர டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Comments