நடிகை வரலட்சுமி சரத்குமாரின் சமூக வலைதள பக்கங்களை முடக்கிய ஹேக்கர்கள்
தனது டுவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக நடிகை வரலட்சுமி சரத்குமார் தெரிவித்துள்ளார்.
சண்டகோழி 2, சர்கார் உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் வரலட்சுமி சரத்குமார். சமூக வலைதளங்களில் தீவிரமாக இயங்கி வரும் இவர், பல்வேறு விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்து வந்தார். இந்நிலையில், நேற்றிரவு இவரது சமூக வலைதள பக்கங்களை ஹேக்கர்கள் முடக்கியுள்ளனர்.
இது தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள அவர், தனது கணக்குகளை மீட்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக கூறியுள்ளார்.
Comments