சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 10 நீதிபதிகள் பதவியேற்பு
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிதாக நியமிக்கப்பட்ட 10 நீதிபதிகளும் பதவியேற்றுக் கொண்டனர்.
மாவட்ட நீதிபதிகள் அந்தஸ்தில் இருந்த சந்திரசேகரன், நக்கீரன், வி.சிவஞானம், இளங்கோவன், ஆனந்தி, கண்ணம்மாள்,
எஸ்.சதிக்குமார், முரளி சங்கர், மஞ்சுளா, தமிழ்ச்செல்வி ஆகியோரை சென்னை உயர் நீதிமன்றத்திற்கு கூடுதல் நீதிபதிகளாக நியமித்து குடியரசுத் தலைவர் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
இவர்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.புதிதாக பதவியேற்றுக் கொண்ட நீதிபதிகளில், முரளிசங்கர்-தமிழ் செல்வி ஆகியோர் கணவன்-மனைவி ஆவர்.
சென்னை உயர்நீதிமன்றத்திற்கு 75 நீதிபதி பதவிகள் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கெனவே 53 நீதிபதிகள் உள்ளனர். புதிய நீதிபதிகள் பதவியேற்பு மூலம் இந்த எண்ணிக்கை 63 ஆக உயர்ந்துள்ளது. காலியிடங்களின் எண்ணிக்கை 12 ஆகக் குறைந்துள்ளது.
Comments