புரெவிப் புயலின் தாக்கம்... தென்மாவட்டங்களில் மழை..!

0 2898
புரெவிப் புயலின் தாக்கம்... தென்மாவட்டங்களில் மழை..!

புரெவிப் புயல் காரணமாக இராமநாதபுரம், தூத்துக்குடி மாவட்டங்களின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள புரெவிப் புயலின் காரணமாக இராமேஸ்வரம், பாம்பன், மண்டபம் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்று வீசி வருகிறது. இராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்றிரவு முதல் விட்டு விட்டு மழை பெய்து வருகிறது.

மாவட்டத்தில் அதிக அளவாக இராமேஸ்வரத்தில் 12 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. தங்கச்சிமடத்தில் 8 சென்டிமீட்டரும், பாம்பனில் 6 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இன்று அதிகாலை முதல் விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகிறது. தூத்துக்குடி நகரிலும் அதிகாலை முதல் விட்டு விட்டு லேசான மழை பெய்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments