டெல்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பக்கூடாது என அடையாளப்படுத்திய டுவிட்டர்

0 2221
டெல்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக தவறான தகவல்களை பரப்பக்கூடாது என அடையாளப்படுத்திய டுவிட்டர்

டெல்லி விவசாயிகள் போராட்டம் தொடர்பாக, சமூக வலைதளங்களில் வைரலாகும்,புகைப்படம் தொடர்பாக, பாஜக ஐ.டி விங் தலைவர் அமித் மால்வியா, (Amit Malviya) தவறான தகவல்களை பரப்பக் கூடாது என, டுவிட்டர் நிறுவனம் அடையாளப்படுத்தியுள்ளது.

வயது முதிர்ந்த பஞ்சாப் விவசாயியை, ஹரியானா போலீசார், தடியடி நடத்திய புகைப்படமும், அதுகுறித்த வீடியோவும், சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுதொடர்பான புகைப்படத்தை, காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி, தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார்.

இது பொய் தகவல் என பாஜக ஐ.டி விங் தலைவர் அமித் மால்வியா, புகைப்படம் ஒன்றை பதிவிட்டு, அதில், போலீசாரின் லத்தியே படவில்லை என தலைப்பிட்டிருந்தார்.

இதை ஆராய்ந்த டுவிட்டர் நிறுவனம், பொய்யான தகவல்களை பரப்பக் கூடாது என்றும், அது தங்களது ஊடக கொள்கைக்கு எதிரானது என்றும் கூறி, அதுதொடர்பான இடுகை ஒன்றையும், அவரது பதிவில் வெளியிட்டிருக்கிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments