புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும்... மத்திய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

0 1664
புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற நாடாளுமன்றத்தைக் கூட்ட வேண்டும்... மத்திய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற நாடாளுமன்றத்தின் சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என, விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்கங்களில் ஒன்றான, கிரந்திகாரி கிசான் யூனியனின் தலைவர் தர்சன்பால் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த அறிவிப்பை இன்றைக்குள் வெளியிடாவிட்டால் வரும் ஐந்தாம் தேதி நாடு தழுவிய அளவில் உருவப்பொம்மை எரிப்புப் போராட்டம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறினார்.

இதனிடையே, வேளாண்சட்டத்தில் குறைந்தபட்ச ஆதார விலை தொடர்பாக மாற்றம் செய்ய, மத்திய அரசு ஆலோசனை செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments