"தாய்மொழியிலேயே தொழில்முறைக் கல்வி பயில நடவடிக்கை" - அமைச்சர் ரமேஷ் பொக்ரியால்
பொறியியல், மருத்துவம் மற்றும் சட்டம் உள்ளிட்ட தொழில்முறை படிப்புகளை, மாணவர்கள் தங்களது தாய்மொழியிலேயே பயில்வதற்கான திட்டத்தை மத்திய அரசு முன்னெடுத்துள்ளது.
டெல்லியில் பேசிய மத்திய கல்வி அமைச்சர் ரமேஷ் பொக்ரியால், ஆங்கில மொழி சிக்கலால் தொழில்நுட்ப கல்வியை இழக்க நேரிடும் மாணவர்களை கருத்தில் கொண்டு, மாணவர்கள் தாய்மொழியிலேயே தொழில்முறை கல்வி பயில நடவடிக்கை எடுக்கப்படும் என்றார். மாணவர்கள் மீது எந்தவொரு மொழியும் திணிக்கப்படாது எனவும், ரமேஷ் பொக்ரியால் குறிப்பிட்டார்.
Comments