பிரான்சில் சிங்கக் குட்டிகளுக்கு கையால் உணவளித்த பார்வையாளர்கள் - விலங்கியல் பூங்காவுக்கு சீல்
பிரான்சில் சிங்கங்களுக்கு உணவளிக்க பார்வையாளர்களை பயன்படுத்திய விலங்கியல் பூங்காவுக்கு சீல் வைக்கப்பட்டது.
தலைநகர் பாரீசுக்கு அருகில் உள்ள விலங்கியல் பூங்காவில் உள்ள சிங்கம் மற்றும் புலிகளுக்கு பார்வையாளர்கள் நேரடியாக உணவு வழங்கி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து அங்கு சென்ற போது, சிங்கக் குட்டிகளை மடியில் வைத்து அவற்றுக்கு பாலாடைக் கட்டி வழங்கப்பட்டது தெரியவந்தது.
இதையடுத்து விலங்குகள் நல அமைப்பான ஃபோர் பாஸ் அமைப்பினர் அளித்த புகாரின் அடிப்படையில் விலங்கியல் பூங்காவில் இருந்த 14 சிங்கம் மற்றும் புலிக் குட்டிகளை போலீசார் பறிமுதல் செய்து பூங்காவுக்கு சீல் வைத்தனர்.
Comments