புயலுக்கு ஏன் புரெவி என்று பெயர்?
தற்போது உருவான புயலுக்கு ‘புரெவி’ என்ற பெயரை மாலத்தீவு நாடு சூட்டி உள்ளது. ஒவ்வொரு புயல் உருவாகும் போதும் அதற்கு வங்க கடல், அரபி கடல் பகுதிகளை ஒட்டியுள்ள நாடுகள் பெயர்களை சூட்டுகின்றன.
அதன்படி, வங்காளதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஏமன் ஆகிய 13 நாடுகள் ஆண்டுக்கு ஒன்று கணக்கில் தலா 13 பெயர்களை வழங்கும்.
தற்போது உருவான புயலுக்கு மாலத்தீவில் பேசப்படும் தைவிகி மொழியிலான ‘புரெவி’ என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. ‘புரெவி’ என்பது சதுப்பு நிலத்தில் வளரும் ஒரு தாவரத்தின் பெயர்.
கடும் புயலையும் தாங்கும் அந்த தாவரத்தின் பெயரே புயலுக்கும் சூட்டப்பட்டுள்ளது. அடுத்த புயலுக்கு மியன்மர் நாடு வழங்கிய துகேட்டி என்று பெயர் சூட்டப்படும்.
Comments