டிசம்பர் மாதம் முழுவதும் கொடி நாள் கொண்டாடப்படும் - அமைச்சர் ராஜ்நாத்சிங்
டிசம்பர் மாதம் முழுவதும் கொடி நாள் கொண்டாடப்படும் என்று பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு அவர் அளித்த பேட்டியில், வழக்கமாக டிசம்பர் 7 ஆம் தேதி மட்டும் கொடி நாள் கொண்டாடப்படும் நிலையில், இந்த ஆண்டு உயிர்தியாகம் செய்த பாதுகாப்பு படையினரை கவுரவிக்கும் வகையில் டிசம்பர் மாதம் முழுவதும் கொடி நாள் கொண்டாடப்படும் என்றார்.
தேசத்தை காக்கும் பணியில் வீரமரணம் அடைந்த மற்றும் காயமடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு ஆதரவளிப்பது தேசிய கடமை என்று அவர் குறிப்பிட்டார். கொடிநாள் நிதிக்கு அனைவரும் பங்களிப்பு செய்யவும் ராஜ்நாத்சிங் வேண்டுகோள் விடுத்தார்.
Comments