ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி, தமிழக வீரர் நடராஜன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தல்

0 8410

ஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது மற்றும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. கான்பெராவில் நடைபெற்ற போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 302 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக பாண்டியா 92 ரன்களும், ஜடேஜா 66 ரன்களும், கேப்டன் கோலி 63 ரன்களும் குவித்தனர்.

இதனைத்தொடர்ந்து களமிறங்கிய ஆஸ்திரேலிய அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அதிகபட்சமாக கேப்டன் பிஞ்ச் 75 ரன்களும், மேக்ஸ்வெல் 59 ரன்களும் சேர்த்து ஆட்டமிழக்க அந்த அணி 49.3 ஒவர்களில் 289 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

சிறப்பாக பந்து வீசிய தமிழக வீரர் டி.நடராஜன் அறிமுக போட்டியிலேயே 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
முதல் 2 போட்டிகளில் வெற்றி பெற்ற ஆஸ்திரேலிய அணி 2க்கு 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments