உத்தரப்பிரதேசத்தில் உலக தரத்தில் திரைப்பட நகர் கட்டமைக்க முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் திட்டம்

0 1412
உத்தரப்பிரதேசத்தில் உலக தரத்தில் திரைப்பட நகர் கட்டமைக்க திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

உத்தரப்பிரதேசத்தில் உலக தரத்தில் திரைப்பட நகர் கட்டமைக்க திட்டமிட்டுள்ளதாக முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சிறந்த கட்டமைப்புடன் திரைப்பட நகரை உருவாக்குவதற்காக, முக்கிய பட தயாரிப்பாளர்கள், இயக்குனர்கள், நடிகர்களை சந்தித்து ஆலோசனை நடத்தியதாக கூறினார்.

மும்பையில் இருந்து திரைப்பட தொழிலை யாரும் வேறு இடத்திற்கு எடுத்துச் செல்ல அனுமதிக்க முடியாது என்ற மகாராஷ்டிரா முதலமைச்சர் உத்தவ் தாக்கரே பேசியதற்கு பதிலளித்த யோகி, தான் எதையும் எடுத்துச் செல்ல வரவில்லை என்று கூறினார். முன்னதாக லக்னோ மாநகராட்சியின் 200 கோடி ரூபாய் மதிப்பிலான கடன் பத்திர திட்டத்தை மும்பை பங்குச்சந்தையில் மணி அடித்து யோகி ஆதித்யநாத் துவக்கி வைத்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments