புவியீர்ப்பு இல்லாத சர்வதேச விண்வெளி நிலையத்தில் முள்ளங்கியை வெற்றிகரமாக வளர்த்த நாசா
மைக்ரோகிராவிட்டி எனப்படும் புவியீர்ப்பு சக்தி இல்லாத சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி நிலையத்தில், முள்ளங்கியை நாசா வெற்றிகரமாக வளர்த்துள்ளது.
சந்திரன் மற்றும் செவ்வாய்க்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் உள்ளதால், எதிர்கால விண்வெளி வீரர்களுக்கு பிரெஷ்ஷான உணவை அளிக்கும் திட்டத்துடன், இந்த முயற்சி மேற்கொள்ளப்பட்டது.
செடிகள் வேர் விடுவதற்கு அத்தியாவசியமான புவியீர்ப்பு சக்தி இல்லாததால், தலையணை போன்ற வடிவமைப்பு ஒன்றில், உரம் மற்றும் நீர் கிடைக்கும் வகையில் இந்த செடிகள் வளர்க்கப்பட்டன.
சிவப்பு மற்றும் நீல ஒளி உமிழும் விளக்குகள் வாயிலாக அவற்றுக்கு வெப்பம் ஊட்டப்பட்டது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள கென்னடி விண்வெளி கட்டுப்பாட்டு அறையில் இருந்து, விஞ்ஞானிகள் முள்ளங்கி செடி வளர்வதை சென்சர்கள் வாயிலாக கண்காணித்தனர்.
Comments