30 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய அரிசியை இறக்குமதி செய்யும் சீனா
முப்பது ஆண்டுகளுக்குப் பிறகு முதன்முதலாக சீனா இந்தியாவிடம் இருந்து அரிசியை இறக்குமதி செய்ய தொடங்கியுள்ளது.
சீனாவில் அரிசி தட்டுப்பாடு ஏற்பட்டதாலும், சலுகை விலைக்கு கிடைப்பதாலும் சீனா இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்வதாக, அரிசி ஏற்றுமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன் படி வரும் 3 மாதங்களில் டன்னுக்கு 22 ஆயிரத்து 200 ரூபாய் என்ற விலைக்கு ஒரு லட்சம் டன் அரிசியை ஏற்றுமதி செய்ய இந்திய வர்த்தகர்கள் ஒப்பந்தம் போட்டுள்ளனர்.
இந்திய அரிசியின் தரத்தை பார்த்த பிறகு அடுத்த ஆண்டு சீன ஏற்றுமதி அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது. உலகின் மிகப்பெரிய அரிசி இறக்குமதியாளரான சீனா, ஆண்டுதோறும் சுமார் 40 லட்சம் டன் அரிசியை பல நாடுகளில் இருந்து இறக்குமதி செய்கிறது.
ஆனால் இந்திய அரிசியின் தரம் குறைவானது என்று கூறி 30 வருடங்களாக சீனா இறக்குமதி செய்யாமல் இருந்தது. இந்தியா உலகின் மிகப்பெரிய அரிசி ஏற்றுமதியாளராக உள்ளது.
Comments