பழமையான கல்வெட்டுக்களை, பாதுகாக்க அரசு எடுத்த நடவடிக்கை என்ன? - தொல்லியல் துறை பதிலளிக்க உயர்நீதிமன்ற கிளை உத்தரவு
பழமையான கல்வெட்டுக்களை, பாதுகாக்க அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? என பதிலளிக்குமாறு மத்திய-மாநில தொல்லியல் துறை பதிலளிக்க உயர் நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் 6 ஆம் நூற்றாண்டை சேர்ந்த தொன்மையான சின்னங்கள் கல்வெட்டுகள், தமிழ் படிமங்கள், போன்றவை தற்போது மைசூரில் வைக்கப்பட்டுள்ளன. அவை முறையாக பராமரிக்கப்படாமல் சேதமடையும் அபாயம் உள்ளது.
எனவே அவற்றை தமிழகத்திற்கு மாற்றி, உத்தரவிட வேண்டும் என மனு தாக்கலானது. அதன் மீதான விசாரணையில்,கல்வெட்டுகள், படிமங்கள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது.
அவற்றை தமிழகத்திற்கு கொணர பாதுகாப்பான தட்ப வெப்ப நிலை இல்லை. என மத்திய அரசு தரப்பில் பதிலளிக்கப்பட்டது. அதைக் கேட்ட நீதிபதிகள், தமிழகத்திற்கு மாற்ற நீதிமன்றம் உத்தரவிடும் பட்சத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை செய்து தர தமிழக அரசு தயாரா? என கேள்வி எழுப்பினர்.
Comments