ஆடுகளை வெட்டாமலேயே மட்டன் சாப்பிடலாம்!- சிங்கப்பூர் அரசு திடீர் முடிவு

0 30658

உலகத்திலேயே முதல் முறையாக ஆய்வகங்களில் இறைச்சியை உற்பத்தி செய்து  விற்பனை செய்ய சிங்கப்பூர் அரசு முடிவு செய்துள்ளது. 

அசைவப் பிரியர்கள் விரும்பி உண்ணும்  கோழி மற்றும் ஆட்டிறைச்சி போன்றவற்றை ஆடுகளை, கோழிகளை வெட்டி பெறுகிறோம். இதற்காகவே, மட்டன், கோழிக்கடைகளும் இயங்கி வருகின்றன.  இனி ஆடு மாடுகளை வெட்டாமல் இனி அதற்கான அவசியம் இருக்காது எனவும் அதற்கு மாற்றாக ஆய்வகங்களிலே ஆட்டிறைச்சி, கோழி இறைக்கி, மாட்டிறைச்சியை தயாரிக்க  சிங்கப்பூர் அரசு முடிவெடுத்துள்ளது.  

விலங்குகளின் உடல் திசுக்களிலிருந்து இருந்து செல்கள் பிரிக்கப்பட்டு அதன் மூலம் ஆய்வகங்களில் இறைச்சி தயாரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த இறைச்சி செயற்கையாக தயாரிக்கப்பட்டாலும், இயற்கையான சுவை கிடைக்கும் என்றும் சொவ்லப்படுகிறது. மேலும், உடல் நலனுக்கும் உகந்ததாக இருக்கும் என்றும் சொல்லப்படுகிறது. அதோடு, கால்நடைகள் பெருமளவு கொல்வதும் தடுக்கப்படும் என்று நம்பப்படுகிறது. 

முதுல் கட்டமாக சிங்கப்பூரில்  'ஜஸ்ட் ஈட்' என்ற அமெரிக்க நிறுவனத்துக்கு  செயற்கை இறைச்சியை தயாரிக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  சர்வதேசளவில் 20- க்கும் மேற்பட்ட ஆய்வகங்கள்,  ஆடு, கோழி மற்றும் மீன் இறைச்சி வகைகளை  உற்பத்தி செய்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments