ஆறுகளை மாசுபடுத்துவோர் மீது ஏன் குண்டாஸ் போடக்கூடாது ? உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி
ஆறுகளை மாசு படுத்துவோர் மீது குண்டர் சட்டம் பாயும் வகையில் ஏன் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ளக்கூடாது? என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை கேள்வி எழுப்பியது.
கரூர் ,திருப்பூர் ஆகிய ஊர்களில் உள்ள சாயப்பட்டறை நிறுவனங்கள் தங்களது நிறுவன கழிவுகளை ஆற்றுக்குள் கலப்பதாக மனு தாக்கல் செய்யப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், கரூர் மாவட்டத்தில் எத்தனை சாய பட்டறைகள், ஆலைகள், தொழிலகங்கள் உள்ளன? எத்தனை நிறுவனங்களின் கழிவு நீர்அமராவதி ஆற்றில் கலக்கிறது?கழிவு நீரை சுத்திகரிக்க சுத்திகரிப்பு நிலையம் உள்ளதா? ஒவ்வொரு நிறுவனத்திற்கும் எவ்வளவு தண்ணீர் கொடுக்கப்படுகிறது? எவ்வளவு கழிவு நீர் வெளியேற்றப்படுகிறது? என்பன குறித்து மாசு கட்டுப்பாட்டு வாரியம், கரூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோர் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
ஆறுகளை மாசு படுத்துவோர் மீது குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டால்தான் ஆறுகளைப் பாதுகாக்க இயலும் எனவும் கருத்து தெரிவித்தனர்.
Comments