டிஜிட்டல் பரிவர்த்தனை செயலிகளுக்கு 30 சதவிகிதம் உச்சவரம்பு விதிப்பு
டிஜிட்டல் வழியாக பணபரிவர்த்தனை நடத்தும் செயலிகள், ஒட்டு மொத்த பரிவர்த்தனையில் 30 சதவிகிதம் என்ற அளவுக்கு மட்டுமே பரிவர்த்தனை செய்ய முடியும் என்ற கட்டுப்பாட்டை மத்திய அரசு கொண்டுவந்துள்ளது.
கூகுள், பேஸ்புக் போன்ற பிரம்மாண்ட நிறுவனங்களின் செயலிகளால், சிறிய டிஜிட்டல் பேமென்ட் செயலிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதும் இதற்கு காரணமாக கூறப்படுகிறது.
ஃபேஸ்புக் நிறுவனத்தின் வாட்ஸ்ஆப் செயலியும் விரைவில் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையில் இறங்க உள்ளது.
வாட்ஸ்ஆப் இந்தியாவில் கோடிக்கணக்கான பயனாளர்களை கொண்டுள்ளது. விரைவில் வர உள்ள அதன் புதிய டிஜிட்டல் பரிவர்த்தனை செயலியால் இதர செயலிகள் முடங்காமல் தடுப்பதும் இதன் பின்னணியில் உள்ளதாக சொல்லப்படுகிறது.
Comments