பிரபல ஹாலிவுட் நடிகை எலன் பேஜ் திருநம்பியாக மாறினார்

0 22612
பிரபல ஹாலிவுட் நடிகை எலன் பேஜ் திருநம்பியாக மாறினார்

ஜூனோ திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட பிரபல ஹாலிவுட் நடிகை எலன் பேஜ், தன்னை திருநம்பியாக அடையாளப்படுத்தி கொண்டுள்ளார்.

கனடாவைச் சேர்ந்த எலன் பேஜ், ஜூனோ, இன்செப்சன், டூ ரோம் வித் லவ் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். 2014ல் தன்னை தற்பாலின ஈர்ப்பாளராக அடையாளப்படுத்திக்கொண்ட எலன், எம்மா என்ற பெண்ணை மணந்தார்.

இதன் பிறகு, LGBTQ சமூகத்துடன் இணைந்து அவர்களின் உரிமைகளுக்காக குரல் கொடுத்து வந்தார். இந்நிலையில், தற்போது தாம் திருநம்பியாக மாறிவிட்டதாகவும், தனது பெயரை எலியட் பேஜ் என்று மாற்றிக்கொண்டுள்ளதாகவும் சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments