மரடோனா மரணம் தொடர்பாக அவரது மனநல மருத்துவரின் வீட்டில் அதிகாரிகள் சோதனை

0 1560
மரடோனா மரணம் தொடர்பாக அவரது மனநல மருத்துவரின் வீட்டில் அதிகாரிகள் சோதனை

கால்பந்து ஜாம்பவான் மரடோனாவின் மரணம் தொடர்பாக அவரது மனநல மருத்துவரின் வீட்டில் அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளனர்.

மூளையில் அறுவை சிகிச்சை நடைபெற்று சிகிச்சை பெற்று வந்த மரடோனா கடந்த 25ம் தேதி திடீர் மாரடைப்பால் உயிரிழந்தார். மருத்துவரின் கவனக்குறைவால் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில், இது குறித்து விசாரணை நடத்த குழு அமைக்கப்பட்டது.

இதனையடுத்து கடந்த சில நாட்களுக்கு முன்பு மருத்துவர் லூகேவின் வீட்டில் சோதனை நடத்தப்பட்டு சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் கைப்பற்றபட்ட நிலையில், தற்போது மனநல மருத்துவர் அகஸ்டினாவின் வீடு மற்றும் அலுவலகத்தில் சோதனை நடைபெற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments