மதுரை: சிம்மக்கல் கல்பாலம் உள்ளிட்ட தரைப் பாலங்களை மூழ்கடித்தபடி செல்லும் வெள்ளம்

0 1949
மதுரை: சிம்மக்கல் கல்பாலம் உள்ளிட்ட தரைப் பாலங்களை மூழ்கடித்தபடி செல்லும் வெள்ளம்

மதுரை சிம்மக்கல் அருகேயுள்ள கல்பாலம் உள்ளிட்ட தரைபாலங்களை மூழ்கடித்தபடி வைகை ஆற்றில் வெள்ளம் ஓடுவதால், அந்த பாலங்களில் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

வைகை அணையிலிருந்து நேற்று முன்தினம் முதல் வினாடிக்கு 3,000 கனஅடி வீதம் 21 நாட்களுக்கு 1,792மில்லியன் கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

இந்த தண்ணீர் வைகை ஆற்றில் வெள்ளம் போல் இரு கரையை தொட்டபடி செல்கிறது. குறிப்பாக சிம்மக்கல் அருகே உள்ள கல்பாலம் மற்றும் ஒப்பிலா படித்துறை அருகே உள்ள தரைப்பாலம் உள்ளிட்ட தரைபாலங்களை மூழ்கடித்தபடி செல்கிறது.

எனவே முன்னெச்சரிக்கையாக தரைபாலங்களின் இருபகுதிகளிலும் இரும்பு தடுப்பு மூலம் போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments