300கிலோ எடையுள்ள நபரை, வீட்டை உடைத்து கிரேன் மூலம் மீட்ட மீட்புப்படையினர்
பிரான்சில் உடல்பருமனால் பாதிக்கப்பட்ட நபரை வீட்டினை உடைத்து மீட்புப் படையினர் கிரேன் மூலமாக மீட்டுள்ளனர்.
தெற்கு பிரான்சில் உள்ள பெர்பிக்னன் (Perpignan) பகுதியைச் சேர்ந்த அலைன் பி (Alain P) கடந்த ஆண்டு நேர்ந்த விபத்தின் காரணமாக வீட்டில் படுத்தபடுக்கையாக இருந்துள்ளார்.
இதில் அவரது உடல் எடை 250 முதல் 300 கிலோ வரை கூடியது. இந்நிலையில் அவருக்கு மருத்துவ சிகிச்சை அளிக்க மாண்ட்பெல்லியர்(Montpellier) மருத்துவமனை முன்வந்தது.
இதையடுத்து 50க்கும் மேற்பட்ட மீட்புபணி வீரர்கள் களம் இறங்கி அவரது வீட்டின் ஒருபகுதியை உடைத்து, கூண்டுபோன்ற அமைப்பில் அவரை வைத்து கிரேன் மூலமாகத் தூக்கி இறக்கினர். பின்னர் அந்த குண்டு நபர் சிறப்பு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.
Comments