உ.பி. முதலமைச்சர் யோகி, பாலிவுட் நடிகர் அக்சய் குமார் சந்திப்பு
உத்தரப்பிரதேச மாநிலம் நொய்டாவில் அமைக்கத் திட்டமிட்டுள்ள திரைப்பட நகரம் குறித்து பாலிவுட் திரைப் பிரபலங்களுடன் அம்மாநில முதலமைச்சர் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
மும்பையில் உள்ள டிரைடன்ட் ஹோட்டலில் சுபாஷ் கய், போனிகபூர், ராஜ்குமார் சந்தோஷி, சித்தார்த் ராய் கபூர் ஆகியோர் சந்தித்துப் பேசினர்.
தொடர்ந்து பாலிவுட் நடிகர் அக்சய் குமாரும் யோகி ஆதித்யநாத்தைச் சந்தித்தார். இருவரும், அக்சய் குமாரின் புதிய படம் குறித்து பேசியதாகக் கூறப்படுகிறது.
சுமார் 200 கோடி ரூபாய் மதிப்பில் அக்சய் குமார் நடிப்பில் ராம்சேது என்ற படம் தயாரிக்கப்படுகிறது. இன்றும் பல்வேறு திரையுலகப் பிரபலங்களை சந்திக்க யோகி ஆதித்யநாத் திட்டமிட்டுள்ளார்.
Comments