நடப்பாண்டில் அதிகம் தேடப்பட்ட, பயன்படுத்தப்பட்ட வார்த்தை எது தெரியுமா?
இந்த ஆண்டில் அதிகம் தேடப்பட்டதாகவும், இந்த ஆண்டுக்கான வார்த்தையாகவும், தொற்று நோய் எனப் பொருள்படும் பாண்டமிக் என்ற வார்த்தை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
அமெரிக்காவைத் தலைமையகமாகக் கொண்டு செயல்படும் மெரியம் வெப்ஸ்டர்ஸ் வேர்டு என்ற பதிப்பு நிறுவனம் இதனை அறிவித்துள்ளது. அந்த நிறுவனத்தின் கூற்றுப்படி, சாதாரண ஒற்றைச் சொல், ஒரு சகாப்தத்தை நிர்ணயம் செய்வதாகத் தெரிவித்துள்ளது.
அதன்படி கடந்த மார்ச் மாதம் கொரோனா நோயை பாண்டமிக் என உலக சுகாதார நிறுவனம் அறிவித்ததும், அதற்கான விளக்கம் குறித்து அகராதிகளில் அதிகம் தேடப்பட்டதாக வெப்ஸ்டர்ஸ் தெரிவித்துள்ளது. இது மற்ற தேடல்களை விட ஒரு லட்சத்து 15 விழுக்காடு அதிகம் என்றும் அந்த நிறுவனம் கூறியுள்ளது.
Comments