விவசாய சங்க தலைவர்களுடன் டிச.3 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் நரேந்திரசிங் தோமர்

0 1736
விவசாய சங்க தலைவர்களுடன் டிச.3 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது - அமைச்சர் நரேந்திரசிங் தோமர்

டெல்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாய சங்க தலைவர்களுடன் மத்திய அரசு நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாததால்,  வரும் 3 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. 

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி, டெல்லியில் பஞ்சாப், ஹரியானா உள்பட பல்வேறு மாநில விவசாயிகள் திரண்டு 6வது நாளாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். புதிய வேளாண் சட்டங்கள், விளைபொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலையை அகற்ற வழிவகுக்கும் என்பது விவசாயிகளின் குற்றச்சாட்டு.

மேலும் பெரிய நிறுவனங்களின் கருணையை எதிர்பார்த்திருக்கும் நிலைக்கு தள்ளி விடும் என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர். இந்நிலையில் மத்திய அமைச்சர்கள் நரேந்திரசிங் தோமர், பியூஷ் கோயல் ஆகியோர் 34 விவசாய சங்கங்களின் தலைவர்களுடன் டெல்லியில் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அதில் வேளாண் சட்டங்கள் குறித்து ஆய்வு செய்ய தனி குழு அமைக்கலாம் என்று அரசு தரப்பில் முன்மொழியப்பட்டது. அந்த குழுவில் விவசாய சங்க பிரதிநிதிகள், வேளாண் துறை நிபுணர்கள், மத்திய அரசின் பிரதிநிதிகளை இடம் பெற செய்யலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது.

ஆனால் மத்திய அரசின் திட்டத்தை விவசாயிகள் ஏற்க மறுத்து விட்டனர். கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய வேளாண் துறை அமைச்சர் நரேந்திரசிங் தோமர், இந்த பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாக இருந்தாக கூறினார்.

வரும் 3 ஆம் தேதி மீண்டும் பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்தார். வியாழக்கிழமை நடைபெறும் கூட்டத்தில், வேளாண் சட்டத்தில் விவசாயிகளுக்கு எதிரான பிரிவுகளை நீக்க வலியுறுத்தப்படும் என்றும், தங்களது போராட்டம் தொடர்ந்து நடைபெறும் என்றும் அகில இந்திய விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் பிரேம் சிங் தெரிவித்தார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments