பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களை கையகப்படுத்தக் கூடாது அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அண்ணா பல்கலை., உத்தரவு

0 2557
பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் கையகப்படுத்தக் கூடாது என்று அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

பேராசிரியர்களின் அசல் சான்றிதழ்களை எந்தக் காரணத்தைக் கொண்டும் கையகப்படுத்தக் கூடாது என்று அனைத்து பொறியியல் கல்லூரிகளுக்கும் அண்ணா பல்கலைக்கழகம் சுற்றறிக்கை அனுப்பி உள்ளது.

பேராசிரியர்களை பணி நியமனம் செய்யும் போது, அசல் சான்றிதழ்களை வாங்கி சரி பார்த்த பின்னர் உடனடியாக அவற்றை ஒப்படைக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பணி நியமனம், ஊதியம் போன்றவற்றில் வெளிப்படைத்தன்மையை பின்பற்ற வேண்டும் என்றும் பேராசிரியர்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அசல் சான்றிதழ்களை தனியார் கல்லூரி திருப்பித் தராததால், பேராசிரியர் வசந்தவாணன் தற்கொலை செய்து கொண்டதையடுத்து, இந்த சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments