மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழுள்ள காலியிடங்கள் வாய்ப்பை தவறவிட்ட அரசுப்பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் - தமிழக அரசு
மருத்துவ படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் நிரப்பப்படாத இடங்கள், மாநிலத்திற்கே திருப்பி அளிக்கப்படும் பட்சத்தில், அந்த இடங்கள் வறுமையால் வாய்ப்பை தவற விட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் தமிழக அரசு உறுதியளித்துள்ளது.
7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் மருத்துவ படிப்புக்கான சீட் கிடைத்தும் கட்டணம் செலுத்த இயலாமல் வாய்ப்பை தவறவிட்ட அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மீண்டும் வாய்ப்பளிக்க உத்தரவிடக் கோரிய வழக்கு நீதிபதி கிருபாகரன், புகழேந்தி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, அகில இந்திய ஒதுக்கீட்டின் கீழ் காலியாக உள்ள இடங்கள், அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஒதுக்கப்படுமென்ற அரசு தரப்பு பதிலை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.
Comments