தலைவர்கள் சிலைகள் கூண்டுக்குள் வைக்கப்பட்டிருப்பது, அவர்களை அவமதிப்பது போல் உள்ளது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

0 1540
தலைவர்கள் சிலைகள் கூண்டுக்குள் வைக்கப்பட்டிருப்பது, அவர்களை அவமதிப்பது போல் உள்ளது - உயர்நீதிமன்ற மதுரைக்கிளை

மரியாதை நிமித்தமாக வைக்கப்படும் சிலைகளில், சில , கூண்டுகளில் வைக்கப்பட்டிருப்பது, தலைவர்களை அவமதிப்பது போல உள்ளதாக, உயர்நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

பல அரசியல்வாதிகள் சிலைகளுக்கு மரியாதை செய்வதை தங்களின் ஆதாயத்திற்காக செய்வதாக, நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். அவ்வாறான நிகழ்வுகளின் போது சாலைகளில் போக்குவரத்து நிறுத்தப்படுவதால் பொதுமக்கள் பாதிப்பிற்கு உள்ளாவதாகவும், நீதிபதிகள் கூறியுள்ளனர்.

தமிழகத்தில் அங்கீகரிக்கப்படாத சிலைகளை உடனடியாக அகற்ற கோரிய பொதுநல மனுவை விசாரித்த, உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிருபாகரன், புகழேந்தி அமர்வு, வழக்குத் தொடர்பாக, தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டதோடு, வழக்கு விசாரணையை, வருகிற 14ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments