வங்க கடலில் புயல்... தென் மாவட்டங்களில் அதி கனமழை..!

0 7156
வங்க கடலில் நாளை புயல் உருவாகும் என்றும் இதன் காரணமாக 5 மாவட்டங்களில் அதி கனமழைக்கும்,12 மாவட்டங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வங்க கடலில் நாளை புயல் உருவாகும் என்றும் இதன் காரணமாக 5 மாவட்டங்களில் அதி கனமழைக்கும்,12 மாவட்டங்களில் மிக கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

புயல் பாம்பன் - குமரி இடையே கரை கடக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதுகுறித்து அந்த மையம் விடுத்துள்ள செய்தி குறிப்பில், வங்க கடலில் உருவாகி உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 12 மணி நேரத்தில் புயலாக மாறும் என்றும், மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை  இலங்கையில் கரையை கடந்து செல்லும் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த புயல் வருகிற 4 ஆம் தேதி அதிகாலையில் கன்னியாகுமரி-பாம்பன் இடையே கரையைக் கடக்கக் கூடும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இது  தீவிர புயலாக மாற வாய்ப்பில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments