பிச்சை எடுப்பதில் ஏரியா தகராறு : நாகர்கோவிலில் யாசகர் கொலை!

0 18771
கொலையில் ஈடுபட்ட ஜார்கண்ட் மாநில யாசகர்

நாகர்கோவில் ஏரியா பிரிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிச்சைக்காரர் தமிழ்நாட்டை சேர்ந்த பிச்சைகாரரை நடுரோட்டில் கம்பால் அடித்து கொலை செய்த சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் சுற்றுவட்டார பகுதிகளில் வெளி மாநிலங்களை சேர்ந்த பலரும் பிச்சை எடுத்து பிழைப்பு நடத்தி வருகின்றனர். வடசேரி பேருந்து நிலையம் ,அண்ணா பேருந்து நிலையங்களில் இவர்கள் இரவில் தங்குவது வாடிக்கை. இந்நிலையில், ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த பிச்சைக்காரர் ஒருவர் நாகர்கோவில் பெண்கள் கிறிஸ்தவ கல்லூரி அருகில் பிச்சை எடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் பிச்சை எடுக்கும் பகுதியில் தமிழ்நாட்டை சேர்ந்த மற்றொருவரும் பிச்சை எடுத்து வந்துள்ளார் . ஏற்கெனவே, பிச்சை எடுக்கும் ஏரியா பிரிப்பதில் இருவருக்கும் தகராறு இருந்துள்ளது.

தமிழ்நாட்டு பிச்சைகாரர் கிறிஸ்தவ கல்லூரி அமைந்த பகுதிக்கு முதலில் போய் பிச்சை எடுத்து விடுவதால் ஜார்கண்ட் மாநில பிச்சைகாரருக்கு வருவாய் குறைவாகவே கிடைத்துள்ளது. இதனால், இரு பிச்சைக்காரர்களும் அடிக்கடி மோதலில் ஈடுபட்டு வந்துள்ளனர். இந்த நிலையில், இன்று அந்த பகுதியிலுள்ள பேக் கடைக்கு தமிழ்நாட்டு பிச்சைகாரர் முதலில் சென்று பிச்சை எடுத்துள்ளார். ஜார்கண்ட் பிச்சைக்காரரும் போட்டி போட்டுக் கொண்டு உடன் சென்றுள்ளார்.

தமிழ்நாட்டு பிச்சைக்காரருக்கு 2 ரூபாய் பிச்சை கிடைத்துள்ளது. 'யாராவது ஒருவருக்குதான் பிச்சை போட முடியும்' என்று கூறிய கடை உரிமையாளர் ஜார்கண்ட் பிச்சைக்காரரை விரட்டி விட்டுள்ளார். இதனால், ஜார்கண்ட் பிச்சைகாரர் தமிழ்நாட்டு பிச்சைக்காரரிடத்தில் கிடைத்த 2 ரூபாயில் தன் பங்காக 1  ரூபாயை தர வேண்டுமென்று கேட்டுள்ளார். தமிழ்நாட்டு பிச்சைக்காரர் கொடுக்க மறுத்ததால் இருவருக்கும் நடுரோட்டில் தகராறு ஏற்பட்டுள்ளது.

ஒருவர் தமிழிலும் மற்றோருவர் ஹிந்தியிலும் கத்திக் கொண்டே தாக்கிக் கொண்டனர். ஜார்க்கண்ட் மாநிலத்தைச் பிச்சைக்காரர் தன் கையிலிருந்த கம்பால் தமிழ்நாட்டு பிச்சைக்காரரை அடித்து கீழே தள்ளினார் . கீழே விழுந்த தமிழ்நாடு பிச்சைக்காரரை  ஜார்கண்ட் பிச்சைக்காரர் தடியால் அடித்தே கொன்று விட்டார்.  நடுரோட்டில் ஏராளமான மக்கள் முன்னிலையிலேயே இந்த கொலை நடந்தது. இருவரையும் யாரும் தடுக்கவும் முன்வரவில்லை என்பதுதான் சோகக்கரமானது. தகவல் கிடைத்து சம்பவ இடத்துக்கு வந்த வடசேரி போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், ஜார்கண்ட் மாநிலத்தை பிச்சைக்காரரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments