வங்கக் கடலில் உருவாகவுள்ள புயல் எதிரொலியாக, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு 2 தேசிய பேரிடர் மீட்பு குழு வருகை

0 1085
வங்கக் கடலில் உருவாகவுள்ள புயல் எதிரொலியாக, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தலா 20 பேர் கொண்ட 2 தேசிய பேரிடர் மீட்பு குழு வருகை தந்துள்ளது.

வங்கக் கடலில் உருவாகவுள்ள புயல் எதிரொலியாக, கன்னியாகுமரி மாவட்டத்திற்கு தலா 20 பேர் கொண்ட 2 தேசிய பேரிடர் மீட்பு குழு வருகை தந்துள்ளது.

புயல் காரணமாக தென் தமிழகத்தில் மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள நிலையில், மீட்பு நடவடிக்கைகளுக்காக இவர்கள் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

மேலும், மாவட்டத்திலுள்ள 7 தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த 132 தீயணைப்பு வீரர்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர விருதுநகர், மதுரை, தேனி மாவட்டங்களில் இருந்தும் தீயணைப்பு வீரர்கள் கன்னியாகுமரி வருகை தர உள்ளனர்.

மழை, வெள்ளத்தில் சிக்குபவர்களை பாதுகாப்பாக தங்க வைக்க 82 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டு, 76 பகுதிகள் அதிக பாதிப்பை சந்திக்க நேரிடும் பகுதிகளாக கண்டறியப்பட்டுள்ளன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments