ஐதராபாத் மாநகராட்சி தேர்தல் முதலில் மந்தமாக துவங்கிய வாக்குப் பதிவு பின்னர் சீரானது
ஐதராபாத் மாநகராட்சி தேர்தலில் முதலில் மந்தமாக துவங்கிய வாக்குப் பதிவு பின்னர் சீராக நடக்கிறது.
150 மாமன்ற உறுப்பினர்களுக்கு நடைபெறும் தேர்தலில் ஆளும் தெலங்கானா ராஷ்டிரீய சமிதி-உவைசியின் மஜ்லிஸ் கட்சி கூட்டணி மற்றும் பாஜகவுக்கு இடையே கடும் போட்டி நிலவுகிறது.
மெகாஸ்டார் சிரஞ்சீவி ஜூப்ளி ஹில்சில் உள்ள வாக்குச்சாவடியில் மனைவி சுரேகாவுடன் வந்து வாக்களித்தார். திரைப்பட நட்சத்திரங்கள் நாகார்ஜுனா, அவரது மனைவி அமலா, நடிகைகள் மஞ்சு லட்சுமி உள்ளிட்டோரும் வாக்களித்தனர்.
மொத்தம் ஆயிரத்து 122 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். சுமார் 75 லட்சம் பேருக்கு வாக்களிக்கும் தகுதி உள்ளது. 2002 க்குப் பிறகு இந்த தேர்தலில் மீண்டும் வாக்குச் சீட்டு முறை கொண்டுவரப்பட்டுள்ளது.
வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிந்து வரும் 4 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடக்கிறது.
Comments