"8 கோடி தமிழக மக்களுக்கு 23,000 மருத்துவர்களே உள்ளனர்" - போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மருத்துவர் பேட்டி
டிச.4 ல் கொரோனா குறித்து பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம்
கொரோனா நிலவரம் மற்றும் தடுப்பூசி விநியோகம் தொடர்பாக வரும் 4 ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் 10 எம்பிக்களுக்கும் அதிகமாக உள்ள கட்சிகளின் பிரதிநிதிகள் மட்டுமே பேச அனுமதிக்கப்படும் என கூறப்படுகிறது.
10க்கும் குறைவான எம்பிக்களை வைத்துள்ள கட்சிகள் இந்த கூட்டத்தில் பார்வையாளர்களாக மட்டுமே பங்கேற்க அனுமதிக்கப்படும் என பிரதமர் அலுவலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதன் காரணமாக தேசியவாத காங்கிரஸ், சிரோன்மணி அகாலிதளம்,ராஷ்டிரீய ஜனதா தளம், சிபிஐ, சிபிஎம் உள்ளிட்ட கட்சிகள் தங்களது கருத்தை வெளியிட வாய்ப்பு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.
டிச.4 ல் கொரோனா குறித்து பிரதமர் மோடி தலைமையில் அனைத்து கட்சி கூட்டம் || #Delhi | #Covid19 | #PMNarendraModi | #AllPartyMeeting https://t.co/PDitKNqQd9
— Polimer News (@polimernews) December 1, 2020
Comments