பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே சீனா அணை கட்டும் முடிவுக்கு இந்தியா கவலை
பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே பிரமாண்ட அணை கட்டுவதற்கு சீனா திட்டமிட்டுள்ளதற்கு இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
கிழக்கு லடாக் பகுதியில் திபெத் எல்லைக்கு அருகே மிகப்பெரிய நீர்மின் திட்டத்தை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளது. இதற்காக சீனா பவர் கன்ஸ்ரக்சன் கார்ப்பரேஷன் என்ற நிறுவனத்தின் மூலம் பிரம்மபுத்திரா நதியின் குறுக்கே மிகப் பெரிய அணையை கட்ட திட்டமிட்டுள்ளது.
இதன் மூலம் திபெத் தன்னாட்சிக்கு 3 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருமானம் கிடைக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. ஆனால் பிரம்மபுத்திராவின் ஓட்டத்தை சீனா கட்டுப்படுத்துவதற்கு இந்தியத் தரப்பில் கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments