கல்லூரி, பல்கலைக்கழகங்கள் திறப்பு, அரசியல், மதம், பொழுதுபோக்கு சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி புதிய தளர்வுகளுடன் ஊரடங்கு நீட்டிப்பு
கல்லூரி, பல்கலைக்கழகங்கள் திறப்பு, அரசியல், மதம், பொழுதுபோக்கு சார்ந்த கூட்டங்களுக்கு அனுமதி என மேலும் பல்வேறு தளர்வுகளுடன் கொரோனா பொது ஊரடங்கு இம்மாதமும் நீட்டிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு தளர்வுகளுடன், இம்மாதம் 31ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
மருத்துவம் உள்ளிட்ட அனைத்து கல்லூரிகள், பல்கலைக்கழகங்களில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகள் விடுதிகளுடன் 7ஆம் தேதி முதல் தொடங்க அனுமதிக்கப்படுகிறது.
டிசம்பர் 14 முதல் மெரினா உள்ளிட்ட கடற்கரைகள் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படும். இதேபோல சுற்றுலாத் தலங்கள் மக்களின் பயன்பாட்டிற்கு அனுமதிக்கப்படுகிறது.
உள் அரங்கங்களில் மட்டும், அதிகபட்சமாக 200 நபர்கள் பங்கேற்கும் வண்ணம் சமுதாய, அரசியல், பொழுதுபோக்கு மற்றும் மதம் சார்ந்த கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்படுகிறது.
இக்கூட்டங்களுக்கு சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சித் தலைவர்களிடமும், சென்னை மாநகராட்சியில் காவல் துறை ஆணையரிடமும் உரிய முன் அனுமதி பெறுவது அவசியம்.
புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா தவிர வெளி மாநிலங்களிலிருந்து தமிழ்நாட்டிற்குள் வருபவர்களுக்கு தற்போது நடைமுறையிலுள்ள இ-பதிவு முறை, தொடர்ந்து அமல்படுத்தப்படும்.
மத்திய உள் துறை அமைச்சகத்தால் அனுமதிக்கப்பட்ட வழித் தடங்களைத் தவிர, சர்வதேச விமான போக்குவரத்திற்கான தடை மத்திய அரசால் நீட்டிக்கப்பட்டுள்ளதால், அதற்கான தடை தொடரும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
Comments